2016-06-18 11:07:00

இது இரக்கத்தின் காலம் – பாசத்தைப்பற்றிய பாடங்கள்


மேமாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினம் என்று கொண்டாடினோம். ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினம் என்று உலகின் பல நாடுகளில் நாம் கொண்டாடுகிறோம். 1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா மாநிலத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 பேர் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள், தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம் தந்தைக்கு ஒரு தினம் என்று இந்த உலகம் கொண்டாடி வருகிறது.

இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் ஒரு நாளோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினமும், தந்தை தினமும் மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன வியாபாரத் திருநாள்களாக மாறிவிட்டன. வயது முதிர்ந்த காலத்தில், பெற்றோரை, முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாள்களில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து, மலர்களையும், பரிசுகளையும் தருவது, பெற்றோருக்குக் காட்டும் பாசம் என்று சொல்வது முறையா?

பாசத்தைப்பற்றிய பாடங்களை இரக்கத்தின் காலம் நமக்குச் சொல்லித் தரட்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.