2016-06-27 16:02:00

இரமதான் காலத்தில் கத்தோலிக்கர்களின் இரத்த தானம்


ஜூன் 27, 2016. இரமதான் நோன்பு காலத்தில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா இஸ்லாமிய மக்கள் இரத்த தானம் செய்ய வருவதில்லை என்பதால் அப்பற்றாக்குறையை நீக்க பெரிய அளவில் கத்தோலிக்கர்கள் முன்வந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரமதான் நோன்பு காலத்தில் இரத்த தானம் செய்வது, இரமதான் நோன்பை முறிக்க வழி அமைக்கலாம் எனக் கருதி, இக்காலத்தில் இஸ்லாமியர்கள் இரத்த தானம் செய்ய முன்வராததால், மருத்துமனை இரத்த வங்கிகளின் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய மேற்கு சுமத்ரா கத்தோலிக்கர்கள் முன்வந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பதாங் பகுதியிலுள்ள மருத்துவ மனைகளிலுள்ள நோயாளிகளுக்கு உதவும் நோக்கில், ஒவ்வொரு நாளும் 100 பை இரத்தத்தை சேகரித்து வழங்கிவரும் இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கம்,  இரமதான் காலத்தில் கத்தோலிக்கர்களின் தாராளமனதை சார்ந்து நிற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.