2016-07-04 15:02:00

கடந்த ஆண்டு 6209 திட்டங்களுக்கு உதவியுள்ள கத்தோலிக்க அமைப்பு


ஜூலை,04,2016. 2015ம் ஆண்டில் 12 கோடியே 41 இலட்சம் யூரோக்களை திரட்ட முடிந்துள்ள திரு அவையின் Aid to the Church in Need என்ற உதவி அமைப்பு, 146 நாடுகளில் 6209 திட்டங்களுக்கு உதவியுள்ளது.

மக்களின் தாராள உதவியுடன் கடந்த ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டைவிட 600 திட்டங்கள் அதிகமாக நிறைவேற்ற முடிந்தது என அறிவிக்கிறது, இந்த உதவி அமைப்பு.

ஆப்ரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கே அதிக உதவிகளை வழங்கியுள்ளதாகக் கூறும் Aid to the Church in Need என்ற கத்தோலிக்க உதவி அமைப்பு, 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கென மட்டும், அதிலும் குறிப்பாக, அப்பகுதி புலம் பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் பள்ளிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகளுக்கென 4 கோடியே 76 இலட்சத்து 30 ஆயிரம் யூரோக்களை வழங்கியுள்ளது. மத்தியக் கிழக்குப் பகுதியில் ஈராக் மற்றும் சிரியா நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்களே பெருமளவான உதவிகளைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, அருள்பணியாளர்கள் மற்றும் துறவத்தாரின் பயிற்சித் திட்டங்களுக்கெனவும் நிதி உதவிகளை ஆற்றி வருகின்றது, Aid to the Church in Need என்ற கத்தோலிக்க உதவி அமைப்பு. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.