2016-07-04 15:10:00

பங்களாதேஷில் இஸ்லாம் மதத்தைக் காக்க முன்வரவேண்டும்


ஜூலை,04,2016. பங்களாதேஷ் நாட்டின் இஸ்லாமியர் அனைவரும், தங்கள் மதத்தின் புனிதத்தைக் காப்பதற்கு இணைந்து வரவேண்டும் என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற படுகொலையைத் தொடர்ந்து, அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர் பேரவையின், நீதி, அமைதி அவையின் தலைவர், ஆயர் Gervas Rozario அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

இறைவனின் பெயரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த அரக்கத்தனமானத் தாக்குதலை, எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய ஆயர் ரொசாரியோ அவர்கள், இஸ்லாம் மதத்தை உண்மையில் நம்பும் அனைவரும் இவ்வேளையில் தங்கள் மதத்தைக் காக்க முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த 9 பேர், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 7 பேர், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மூவர், இந்தியர் ஒருவர் என, 20 பேரைக் கொன்ற 7 தீவிரவாதிகளில் 6 பேரும், காவல் துறையைச் சார்ந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

டாக்காவின் உணவு விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த தாக்குதலைத் தொடர்ந்து, "இத்தாலி முழுவதும் கண்ணீரில் இணைந்துள்ளது" என்ற வார்த்தைகளை, இத்தாலிய பிரதமர், மத்தேயோ ரென்சி அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.