2016-07-12 16:29:00

உலகில் பெண் சிசுக்கொலைகளில் சீனா, இந்தியா


ஜூலை,12,2016. உலகில் பெண் சிசுக்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடுகளில், சீனாவும், இந்தியாவும் முதலிடங்களில் உள்ளன என்று, புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆசிய மனித உரிமைகள் மையம்(ACHR) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், உலகில் பரவலாக ஆண் குழந்தைகளே அதிகமாக விரும்பப்படுகின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும், 15 இலட்சம் பெண் சிசுக்கள், கருவிலேயே அழிக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

தென் கொரியா இதில் விதிவிலக்கு என்றுரைக்கும் அவ்வறிக்கை, சீனாவில் 115 சிறுவர்களுக்கு 110 சிறுமிகள் என்ற விகிதமும், இந்தியாவில், 112 சிறுவர்களுக்கு 100 சிறுமிகள் என்ற விகிதமும் உள்ள என்றும் தெரிவிக்கின்றது.

தாய்லாந்து நாட்டில், பாலினத்தைத் தெரிவுசெய்வது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல, ஆனால், அந்நாட்டுக்குச் சுற்றுலா மேற்கொள்ளும் சீனர்கள், இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்களில் 70 முதல் 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர், குழந்தை பிறப்போடு தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக மட்டுமே அந்நாடு செல்கின்றனர் என்றும் ACHR மையம் கூறுகிறது.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.