2016-07-16 13:40:00

இது இரக்கத்தின் காலம் - நல்விருந்து வானத்தவர்க்கு


வழியோடு சென்றவர்களை, வலியச்சென்று அழைத்து வந்து, விருந்து படைக்கும் ஆபிரகாமை, விவிலியத்தில் சந்திக்கிறோம். விண்ணவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, ஆபிரகாம் விருந்து படைத்தார் என்று, தொடக்க நூல் சொல்கிறது (தொடக்க நூல் 18: 1-8). நாள் முழுவதும் ஒவ்வொரு விருந்தினராக உபசரித்து, வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்பது, வள்ளுவர் கூறிய அழகான கருத்து.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவது போல், விண்ணவர் என்று தெரியாமலேயே, அவர்களுக்கு விருந்து படைத்த ஆபிரகாமைக் குறித்து புதிய ஏற்பாட்டில் நாம் வாசிப்பது இதுதான்:

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2

சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.

நாம் அறியாமலே வான தூதர்களுக்கு விருந்தளிக்க, இரக்கத்தின் காலம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.