2016-07-16 15:01:00

இராணுவ முகாம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு இழப்பீடு


ஜூலை,16,2016. இலங்கையில் ஒரு மாதத்திற்கு முன்னதாக, இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்தில், தங்களின் வீடுகள் மற்றும் பிற வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு, உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு நகருக்கு அருகேயுள்ள சலாவ(Salawa) இராணுவ முகாமில் கடந்த ஜூன் 5,6 தேதிகளில் ஏற்பட்ட வெடி விபத்தில், அதற்கு அருகிலிருந்த நூற்றுக்கணக்கான வீடுகளும், மக்களின் தொழில் வளங்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளன.

இம்மக்களுக்கு இழப்பீட்டு நிதி கேட்டு, அரசுத்தலைவர், பிரதமர், அதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இம்மக்கள், தங்களின் வாழ்வு முழுவதும் கஷ்டப்பட்டு சேகரித்த அனைத்தையும் இழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.