2016-07-18 16:41:00

பேச்சுவார்த்தை எனும் ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டுகோள்


ஜூலை,18,2016. துருக்கி நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, நாடு சென்றுக் கொண்டிருக்கும் பாதை குறித்த ஒரு தெளிவற்றதன்மையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார், அந்நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paolo Bizzeti.

அண்மை பதட்ட நிலைகள், துருக்கியில் இடம்பெறுவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வதற்கு, பேச்சுவார்த்தைகள் எனும் ஆயதங்களை பயன்படுத்தவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த ஆயர்  Bizzeti அவர்கள், சில காலமாக இருந்துவந்த பகைமை அரசியல் இப்போது வெடித்துள்ளது போன்ற ஒரு தோற்றம் இருப்பினும், அனைத்து நகரங்களும் அமைதியிலேயே இருப்பதாக மேலும் எடுத்துரைத்தார்.

துருக்கியின் தெற்கு நகரமான Iskenderunல் இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களிடையே பணியாற்றிவரும் இத்தாலிய இயேசு சபை ஆயர் Bizzeti அவர்கள், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் விளைவுகள் அதிகமாக உணரப்படவில்லை என தெரிவித்தார்.

தற்போதைய துருக்கி அரசு, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளைத் தொடர்ந்து, இராணுவம் மற்றும் நீதித்துறையின்மீது, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆதாரம் : CatholicCulture/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.