2016-07-25 16:26:00

சிரியா சிறார்களின் கல்விக்கு விண்ணப்பிக்கும் அமைப்பு


ஜூலை,25,2016. லெபனானில் அடைக்கலம் தேடியிருக்கும் ஐந்து இலட்சம் சிறாரில், பாதிக்கும் மேற்பட்டோர், போதிய நிதியின்மையாலும், அரசின் கெடுபிடிகளாலும், கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறுகிறது.

லெபனானில் புகலிடம் தேடியுள்ள சிரியா சிறுவர்களுக்கு பாதுகாப்பு மட்டும் போதாது, அவர்களின் வருங்காலத்திற்கு உதவும் கல்வியும் வழங்கப்பட வேண்டியது அவசியம் எனக் கூறும் Human Rights Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு, தங்கும் அனுமதி குறித்த லெபனானிய அரசின் கட்டுப்பாடுகளாலும், போதிய நிதியின்மையாலும் சிறார்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என கவலையை வெளியிட்டுள்ளது.

சிரியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ள சிறார்களுக்கு கல்வியில் ஆர்வம் இருப்பினும், ஏறத்தாழ 70 விழுக்காட்டு புலம்பெயர்ந்த குடும்பங்கள், கல்விக்கென செலவழிக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.