2016-07-26 16:23:00

உலக பாரம்பரிய சொத்தாக ஜப்பான் கத்தோலிக்க கோவில்


ஜூலை,26,2016. UNESCOவின் உலக பாரம்பரிய சொத்துக்களின் பட்டியலில் இணைக்கப்படுவதற்கு, ஜப்பான் நாட்டின் மிகப் பழமையான கத்தோலிக்கக் கோவிலை பரிந்துரைத்துள்ளது அந்நாட்டு அரசு.

நாகாசாகியிலுள்ள Oura கத்தோலிக்க கோவிலை உலக பாரம்பரியச் சொத்தாக அறிவிக்க UNESCOவிற்கு பரிந்துரைத்துள்ள ஜப்பான் அரசு, ஜப்பான் அரசுக் குழுவால் இந்த கத்தோலிக்க கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

 Oura கத்தோலிக்க கோவில், முதன் முதலில் பிரெஞ்ச் அருள்பணியாளர்களால் 1863ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன்பின் 16 ஆண்டுகளுக்குப்பின் மாற்றி வடிவமைக்கப்பட்டது.

1597ம் ஆண்டில் ஜப்பானில் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரின் நினைவாக இந்தக் கோவில் கட்டப்பட்டது. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.