2016-07-26 16:37:00

கொரிய தீப கற்பத்தில் அமைதி வேண்டி ஆயர்கள்


ஜூலை,26,2016. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டம், மற்றும், அதனை எதிர்கொள்வதற்கு தென் கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை முறியடிப்புத் திட்டம் ஆகியவற்றில் ஏழைமக்களின் பணம் விரயமாக்கப்படுவது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர், தென் கொரிய ஆயர்கள்.

ஏவுகணைகளை மையமாகக் கொண்டுள்ள இத்திட்டங்கள், கொரிய தீபகற்பத்தை ஒரு புதிய பனிப்போருக்குள் நுழைப்பதுடன், ஏழை மக்களின் நலவாழ்வுத் திட்டங்களுக்கென ஒதுக்கப்படவேண்டிய தொகை விரயமாவதற்கும் வழிவகுக்கிறது எனக் கூறும் ஆயர்கள்,  வட கொரியா, தன் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடுவதுடன், தென்கொரியாவும், அப்பகுதியை ஒப்புரவின் இடமாக மாற்ற  தன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்கொரியாவின்  Jeju தீவிலுள்ள Gangjeong கிராமத்திலிருந்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று அமைதி ஊர்வலம் ஒன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கப்பல் படை தளம் ஒன்றை தென்கொரிய அரசு இத்தீவில் நிறுவியுள்ளது, அப்பகுதியின் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என குற்றம் சாட்டிவரும் அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளும் பங்கு பெறும் இந்த அமைதி ஊர்வலம், ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.