2016-08-05 15:42:00

இஸ்லாமிய, கிறிஸ்தவ நல்லுறவின் அடையாளமான பேக்கரி


ஆக.05,2016. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் அமைந்துள்ள ஓர் இஸ்லாமிய 'பேக்கரி' கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமிய, கிறிஸ்தவ நல்லுறவின் ஓர் அடையாளமாக விளங்குகிறது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

லாகூரில் 1879ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட S.Mohkam-ud-Din & Sons என்ற பேக்கரி, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இணைந்திருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பேக்கரி என்ற பெயர் பெற்றுள்ளது.

உயிர்த்த இயேசுவின் பெயரால், லாகூரில், ஆங்கிலிக்கன் பேராலயம் எழுப்பப்பட்டதற்கு இரு ஆண்டுகள் சென்று, பேராலயத்திற்கு அருகில் திறக்கப்பட்ட இந்த பேக்கரி, பிரித்தானிய வீரர்களுக்குத் தேவையான கேக், பிஸ்கட் போன்ற உணவுப் பொருள்களை உருவாக்குவதில் புகழ் பெற்று விளங்கியது.

இந்த பேக்கரி, இஸ்லாம் கிறிஸ்தவ உறவுக்கு ஓர் அடையாளமாக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது என்று, லாகூர் ஆங்கிலிக்கன் பேராலய அதிபர், Shahid Meraj அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.