2016-08-08 15:41:00

அக்கறையற்ற மனநிலை எனும் போக்கு பரவுவதைத் தடுப்போம்


ஆக.08,2016. அக்கறையற்ற மனநிலை என்ற போக்கு உலகமயமாகி வருவதை எதிர்த்து ஒவ்வொருவரும் போரிடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், ஐரோப்பிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Reinhard Marx.

இன்றைய ஐரோப்பாவில் இருவேறு நிலைகளைக் காணமுடிகிறது என்று கூறிய கர்தினால் Marx அவர்கள், ஒருபக்கம் சமூக பதட்ட நிலைகளும், மறுபக்கம் ஒருமைப்பாட்டில் ஒன்றிணைந்து வாழ்வது மறைந்து வருவதும் இருவேறு நிலைகளெனக் கூறினார்.

அக்கறையற்ற மனநிலை உலகமயமாகி வருவதே, இவ்விரு நிலைகளும் பரவிவருவதற்குக் காரணம் எனவும் தெரிவித்தார், கர்தினால் Marx.

நாம் ஒருவரையொருவர் அன்புகூர வேண்டியவர்கள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு, ஐரோப்பாவின் அடிப்படை உணர்வு, ஆகவே நல்ல சமாரியர் என்ற உவமையும், மலைப்பொழிவும் ஐரோப்பாவின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தவை எனவும் கூறினார், ஜெர்மன் கர்தினால் Marx.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.