2016-08-12 15:47:00

அரசியல் கைதிகளை விடுவிக்க சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்


ஆக.12,2016. இலங்கையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுமாறு, அந்நாட்டின் பல்சமயத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்திலும், 2009ம் ஆண்டில் போர் முடிந்த பின்னரும், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு, அந்நாட்டுக் கத்தோலிக்கர் உட்பட, பல்சமயத் தலைவர்கள் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை அரசு ஒப்புரவை விரும்புகிறது, ஆனால் தமிழ் மக்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்ததன் காரணங்களை அரசு அறிந்து கொள்வது அவசியம் என்று, அருள்பணி Jayawardena Sherad அவர்கள் கூறினார். இலங்கையில், 150 அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதாக, ஆங்லிக்கன் சபை குரு மாரிமுத்து சக்திவேல் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்குவதாக, இலங்கை அரசு, கடந்த டிசம்பரில் அறிவித்தது. ஆனால் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று, UCA செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.