2016-08-16 15:25:00

மஞ்சள் காய்ச்சல் நோய் மேலும் பரவக்கூடும்


ஆக.16,2016. ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயக குடியரசு, அங்கோலா ஆகிய நாடுகளில் திடீரென பரவிவரும் மஞ்சள் காய்ச்சல் நோய், ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களுக்கும் பரவக்கூடும் என, Save the Children என்ற சிறார்க்கான பிரித்தானிய அறக்கட்டளை எச்சரித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நோய், தற்போது  காங்கோவிலும், அங்கோலாவிலும் பரவி, இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 400 பேர் உயிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த மஞ்சள் காய்ச்சல் நோயால், அங்கோலாவில் ஏறத்தாழ நான்காயிரம் பேரும், காங்கோவில், 2,200க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கோ தலைநகர் கின்ஷாசாவின் ஒரு பகுதியில் உள்ள ஏறத்தாழ 5 இலட்சம் மக்களுக்கு, இப்புதன்கிழமையன்று இந்நோய் தடுப்பு மருந்து வழங்கும் முயற்சிகள் இடம்பெறவுள்ளன. இதற்கு, Save the Children அமைப்பு உதவவுள்ளது.

ஆதாரம் : பிபிசி/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.