2016-08-20 15:54:00

இந்தியா : வேளாண் நிலங்கள் பாலைநிலங்களாகி வருகின்றன


ஆக.20,2016. இந்தியாவில், 25 விழுக்காட்டுக்கு அதிகமான நிலப்பகுதி, பாலைநிலமாக மாறி வருவதாகவும், வேளாண் நிலங்கள், தரிசு நிலங்களாக மாறி வருவது அதிகரித்து வருவதாகவும் விண்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன என்று, ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், 9 கோடியே 60 இலட்சம் ஹெக்டேர் நிலங்கள் அதாவது, இந்தியாவின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காட்டுப் பகுதி, பயிர்செய்ய இயலாத தரிசு நிலங்களாக மாறியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

ஜார்கண்ட், இராஜஸ்தான், டெல்லி, குஜராத், கோவா போன்ற மாநிலங்களில் ஐம்பது விழுக்காட்டுக்கு அதிகமான நிலப்பகுதி பாலைநிலமாக மாறி வருவதாகவும், அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மேலும், இந்த நிலையை மாற்றுவதற்கு, நாட்டில் எவ்வித முழுமையான திட்டமும் இல்லை என்று, தெற்காசிய நீர்வள ஆய்வுகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஜனகராஜன் அவர்கள் கூறினார். 

ஆதாரம் : Reuters/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.