2016-08-20 14:51:00

ஐ.நா. தலைமையகத்தில் அன்னை தெரேசா பற்றிய அருங்காட்சியகம்


ஆக.20,2016. அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படுவதையொட்டி, நியுயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில், அன்னையவர்கள் வாழ்வு பற்றிய ஓர் அருங்காட்சியகம், ஒரு வாரத்திற்குத் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.

Alliance Defending Freedom என்ற அமைப்புடன் இணைந்து, ஐ.நா.வுக்கான திருப்பீட நிரந்தரப் பணியகம் இந்த நிகழ்வை நடத்தவுள்ளது. இதில், அன்னை தெரேசா அவர்களின் வாழ்வு, பணி போன்ற விபரங்கள் இடம் பெற்றிருக்கும். அன்னையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சில பெரிய மனிதர்கள் இதில் உரையாற்றுவார்கள் என்று, Zenit செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இன்னும், கொல்கத்தாவில் அன்னை தெரேசா அனைத்துலக திரைப்பட விழா, இம்மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவை SIGNIS இந்தியா நடத்துகிறது.

இந்தியாவில் 100 மையங்களிலும், உலக அளவில் 50 இடங்களிலும் இவ்விழாவை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக, இவ்விழா இயக்குனர் சுனில் லூக்காஸ் அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : Zenit/ SIGNIS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.