2016-08-24 17:11:00

இந்திய தேசிய கல்விக்கொள்கை குறித்த ஆயர்களின் பரிந்துரைகள்


ஆக.24,2016. இந்திய தேசிய கல்விக்கொள்கை 2016 தொகுப்பு குறித்த தனது பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.

இந்திய தேசிய கல்விக்கொள்கைத் தொகுப்பில், பன்மைத்தன்மை, சிறுபான்மையினர்க்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்பு உரிமைகள், பழங்குடி மக்கள் மற்றும் தலித்துக்களுக்குப் பாதுகாப்பு போன்றவை இல்லை எனக் கூறியுள்ளது இந்திய ஆயர் பேரவை.

அதேநேரம், நாட்டில் ஒரேவகையான கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சிகளையும் பாராட்டியுள்ளது ஆயர் பேரவை.

நாட்டைக் கட்டி அமைப்பதில் கல்வி முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றும், நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை, 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி, கல்வித்துறையில் முக்கிய பங்காற்றுகின்றது என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

இந்தப் பரிந்துரைகளை, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தெயதோர் மஸ்கரனாஸ் அவர்கள் நிருபர் கூட்டத்தில் அறிவித்தார்.

ஆதாரம் : Indian Express / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.