2016-08-26 16:38:00

அருளாளர் அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்ட் 26


ஆக.26,2016. அருளாளர் அன்னை தெரசா அவர்கள், வருகிற செப்டம்பர் 4ம் தேதி புனிதராக அறிவிக்கப்படவிருப்பதையொட்டி, இரக்கத்திற்கு ஓர் அழைப்பு என்ற தலைப்பில், புதிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.

384 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், அன்னை அவர்கள் பற்றி, எழுத்து மூலமாகவும், பேட்டிகள் வழியாகவும் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன.

1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்த அன்னையவர்களின் பிறந்தநாள், இவ்வெள்ளியன்று பல இடங்களில் சிறப்பிக்கப்பட்டது.

தற்போதைய மசடோனியா நாட்டிலுள்ள ஸ்கோப்ஜெ என்ற நகரில் பிறந்த இவர், 19வது வயதில், மேற்கு வங்க மாநிலம் சென்றார்.கொல்கத்தாவில், வறுமையாலும், நோயாலும் வாடிய மக்களுக்கு சேவை செய்தார். இவர் நிறுவிய, 'பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை, இன்று, 123 நாடுகளில் செயல்படுகிறது. இதில், எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

கடந்த, 1979ல், நொபெல் அமைதிப் பரிசும், 1980ல், இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டன. 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இவர் இறந்தார். 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.