2016-08-27 16:52:00

புனித லீமா ரோஸ் இறந்ததன் 400ம் ஆண்டு நிறைவு


ஆக.27,2016. பெரு நாட்டின் லீமா நகர் புனித ரோஸ் இறந்ததன் 400ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக, யூபிலி ஆண்டை அறிவித்துள்ளது லீமா உயர்மறைமாவட்டம். 

“400 ஆண்டுகள் உனக்காகப் பரிந்துபேசிக் கொண்டிருப்பவர்” என்ற தலைப்பில், ஓராண்டுக்கு இந்த யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது என்று,  அவ்வுயர்மறைமாவட்டம் பத்திரிகையாளர்களிடம் விளக்கியது.

கடந்த 400 ஆண்டுகளாக, இலட்சக்கணக்கான பக்தர்கள், புனித லீமா ரோசிடம் செபித்து ஆறுதலடைந்துள்ளனர் என்றும், இந்த ஓராண்டு ஜூபிலி, ஆகஸ்ட் 29, வருகிற திங்களன்று தொடங்கும் என்றும் கூறியுள்ளது அவ்வுயர்மறைமாவட்டம்.

செபம் மற்றும் ஏழைகளுக்கென தனது வாழ்வை அர்ப்பணித்த புனித ரோஸ், தலைநகர் லீமாவில், 1586ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பிறந்தார். இசபெல்லா என்ற இயற்பெயரைக்கொண்ட இப்புனிதர், பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். 1617ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி இவர் இறந்தார்.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.