சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருத்தந்தை, முகநூலின் தலைமை நிர்வாகி Zuckerberg சந்திப்பு

திருத்தந்தை, முகநூலின் தலைமை நிர்வாகி Zuckerberg சந்திப்பு - AP

29/08/2016 15:15

ஆக.29,2016. முகநூலின் இணை நிறுவனரும், அதன் தலைமை நிர்வாகியுமான Mark Zuckerberg அவர்கள், தனது மனைவி Priscilla Chan அவர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்களன்று, வத்திக்கானில் சந்தித்துப் பேசினார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் கிரேக் புர்க்கே அவர்கள் கூறினார்.

ஊடக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஏழ்மையை எவ்வாறு அகற்றுவது, சந்திப்பு கலாச்சாரத்தை எவ்வாறு ஊக்குவிப்பது, சமூகத்தில் குறிப்பாக, மிகவும் வாய்ப்பிழந்துள்ள மக்களுக்கு நம்பிக்கைச் செய்தியை எவ்வாறு பரப்புவது என்பது பற்றி, Zuckerberg அவர்கள் திருத்தந்தையிடம் விளக்கியதாகக் கூறினார் புர்க்கே.

மேலும், “கடவுள் நம்மீது வைத்துள்ள இரக்கம், நமக்கு அடுத்திருப்பவரிடம் இரக்கமுள்ளவர்களாக நடப்பதற்கு நம்மைத் தூண்டுவதாக!” என்பது, இத்திங்களன்று திருத்தந்தையின் டுவிட்டரில் வெளியானது.

நிலநடுக்கம் மற்றும் வன்முறைகளால் புலம்பெயரும் மக்களின் துன்பங்கள் அதிகரித்துவரும் இந்நாள்களில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, துன்புறும் மக்கள் மீது இரக்கம் காட்ட நமக்கு அழைப்பு விடுக்கிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

29/08/2016 15:15