2016-09-01 16:42:00

பாய்சலாபாத் நிகழ்வுக்கு முஸ்லிம் சமூகத்தினர் மன்னிப்பு


செப்.01,2016. பாகிஸ்தானின் பாய்சலாபாத் நகரின் கிறிஸ்தவர்கள் பகுதி வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளானதற்கு, முஸ்லிம் சமூகத்தினர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, 22 வயது நிரம்பிய Adnan Masih என்ற கிறிஸ்தவர், தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, தற்செயலாக ஒரு முஸ்லிம் மனிதரை இடித்து விட்டார். இந்த முஸ்லிம், உள்ளூரில் செல்வாக்குள்ள முஸ்லிம் தலைவர் ஒருவரின் உறவினர். அக்கிறிஸ்தவர் பலமுறை மன்னிப்புக் கேட்டதையும் தவிர்த்து, அந்த முஸ்லிம், மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு அக்கிறிஸ்தவரை அடித்து காயப்படுத்தியுள்ளார். பின்னர் முஸ்லிம் கும்பல், கிறிஸ்தவர் குடியிருப்பு மீது கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலையடுத்து, கிறிஸ்தவத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புத் தருமாறு வழக்குப் பதிவு செய்தனர். கிறிஸ்தவர்களும் பதிலடி கொடுப்பதாக எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, முஸ்லிம் சமூகத்தினர் மன்னிப்பு கேட்டுள்ளனர் என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது .

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.