2016-09-02 15:45:00

புனித பூமி திருப்பயணங்கள் திருஅவைக்கு வளம் சேர்ப்பவை


செப்.02,2016. புனித பூமிக்கு மேற்கொள்ளப்படும் திருப்பயணங்கள், அங்கு வாழ்கின்ற மக்களுக்கு, கிறிஸ்துவின் வாழ்வுப் பேருண்மைகளை மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கின்றன என்று, எருசலேம் கிறிஸ்தவ அதிகாரி ஒருவர் கூறினார்.

மாரனைட் வழிபாட்டுமுறை எருசலேம் முதுபெரும் தந்தை அலுவலகத்திலிருந்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய Sobhy Makhoul அவர்கள், புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொள்வது, ஒரு விசுவாச செயல் என்று கூறினார்.

கிறிஸ்தவ உலகுக்கும், வெளியிலிருந்து வருபவர்க்கும், கிறிஸ்து பிறந்து, வாழ்ந்து, இறந்த இடங்கள், விசுவாசத்தின் தொடக்கங்களைக் கண்டுணர்வதாக இருக்கின்றன என்றும் கூறினார் Makhoul.

கடந்த காலத்தைவிட இவ்வாண்டில் திருப்பயணிகளின் வருகை 70 விழுக்காடு குறைவு என்றும், பலருக்கு இன்றையப் பிரச்சனை இஸ்லாம் மற்றும் முஸ்லிம் உலகோடு சேர்ந்து வாழ்வது என்று மேலும் கூறினார் Makhoul.

புனித பூமி திருப்பயணங்கள் பற்றிப் பேசிய, எருசலேம் முதுபெரும் தந்தையின் உதவியாளர் ஆயர் Giacinto-Boulos Marcuzzo அவர்கள், எருசலேம் மற்றும் பெத்லகேமில் வாழும் கிறிஸ்தவர்களில் முப்பது விழுக்காட்டினரின் வாழ்வு, சமய சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளது என்றார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.