2016-09-09 16:57:00

உலகளாவிய வளர்ச்சித்திட்ட இலக்கின் வெற்றிக்கு கல்வி


செப்.09,2016. உலகளாவிய புதிய வளர்ச்சித்திட்ட இலக்கு வெற்றியடைவதற்கு கல்வியறிவு மிகவும் இன்றியமையாதது என்று, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள் கூறினார்.

உலக கல்வியறிவு தினத்தின் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, இவ்வியாழனன்று இரு நாள்கள் நிகழ்வைத் துவக்கி வைத்துப் பேசிய, பொக்கோவா அவர்கள் இவ்வாறு கூறினார்.

மனிதர், தங்களின் கனவுகள் மற்றும் ஏக்கங்களுக்கு ஏற்ப, உலகை வடிவமைப்பதற்குத் தேவையான திறமைகளை, கல்வியறிவு வழங்குகின்றது என்றும், இதுவே, உலகில் மனித மாண்புக்கும், உரிமைகளுக்கும் ஊற்றாக உள்ளது என்றும் பொக்கோவா அவர்கள் கூறினார். யுனெஸ்கோ நிறுவனம், செப்டம்பர் 8ம் தேதியை, உலக கல்வியறிவு தினமாக, 1966ம் ஆண்டில் அறிவித்தது.

உலகில், 75 கோடியே 80 இலட்சம் மக்கள், ஒருவரிகூட எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.