2016-09-12 16:48:00

காற்று மாசடைவதால், மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்


செப்.12,2016.  காற்று மாசடையும் சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெர்மனியின் மருத்துவ பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ் தலைமையிலான மருத்துவர் குழு ஒன்று அண்மையில், வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் காற்று மாசடையக்கூடிய பகுதிகளில் வாழும் 3000 பேரின் உடலில் குளுக்கோஸ் அளவின் மாற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்டதில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

காற்று மாசடையும் காரணத்தால் சுவாசக் கோளாறு மற்றும் இதய நோயால் மட்டுமின்றி நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று ஜெர்மன் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : TamilWin/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.