சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

இத்தாலியின் முன்னாள் அரசுத் தலைவர் மறைவுக்கு இரங்கல் தந்தி

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களுடன் இத்தாலியின் முன்னாள் அரசுத் தலைவர் Ciampi - ANSA

17/09/2016 17:02

செப்.17,2016. இத்தாலி நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர், Carlo Azeglio Ciampi அவர்கள், செப்டம்பர் 16, இவ்வெள்ளியன்று இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபத் தந்தியை, அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார்.

மறைந்த Ciampi அவர்கள், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களுடன் கொண்டிருந்த உண்மையான நட்பு குறித்து, திருத்தந்தை தன் தந்திச் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

95 வயது நிறைந்த Ciampi அவர்கள், இத்தாலியின் பிரதமராக ஓராண்டும், பின்னர், 1999ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு முடிய, ஏழு ஆண்டுகள், அரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், "நாம் இயேசுவை உண்மையிலேயே நேருக்குநேர் சந்தித்திருக்கிறோம் என்பது, அவரைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் நம் மகிழ்வில் வெளிப்படும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

17/09/2016 17:02