2016-09-19 17:28:00

உதவும் அமைப்புகளுக்கு உதவ இஸ்பெயினில் நடைபயணம்


செப்.19,2016. வட ஈராக்கில் பணிபுரியும் Aid to the Church in Need என்ற அமைப்புக்கும், அகதிகளிடையே பணிபுரியும் இயேசு சபையின் JRS அமைப்புக்கும் உதவும் நோக்கில் இஸ்பெயின் நாட்டில் நடைபயணம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்பெயினின் பர்சலோனா நகரில் Verdu என்ற இடத்தில் அமைந்துள்ள புனித பீட்டர் கிளேவர் திருத்தலத்திலிருந்து, Montserrat எனுமிடத்திலுள்ள துறவுமடம் வரை இம்மாதம் 25ம் தேதி ஞாயிறன்று மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தின்போது திரட்டப்படும் நிதி, Aid to the Church in Need மற்றும் JRS நிறுவனங்களின் பணிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித இக்னேசியஸ் இலோயாலா அவர்கள் நடந்து சென்ற இதே பாதையில், ஏற்கனவே நடந்து, சிரியா நாட்டு அகதிகளுக்கு என 35,000 இங்கிலாந்து பவுண்டுகளை திரட்டியுள்ளது இந்த Mount Street Community என்ற அமைப்பு.

இதற்கிடையே, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனையில் இங்கிலாந்து அரசு மேலும் உதவிகள் ஆற்றவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் கடந்த சனிக்கிழமையன்று கிறிஸ்தவ சபைகளின் ஊர்வலம் ஒன்று இலண்டனில் மேற்கொள்ளப்பட்டது.

ஆதாரம் : ICN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.