2016-09-20 17:30:00

அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஐ.நா.வில் மாற்றம் தேவை


செப்.20,2016. அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்களின் பாதுகாப்பை அனைத்து நாடுகளும் உறுதி செய்வதோடு, அதற்கியைந்தாற்போல் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைப்பு முறைகளும் மாற்றம் செய்யப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன, அனைத்துலக காரித்தாஸ் மற்றும் JRS நிறுவனங்கள்.

நியூ யார்க் நகரில் இடம்பெறும் அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தோருக்கான ஐ.நா.வின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கூட்டத்தை முன்னிட்டு, அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும், இயேசு சபையின் JRS என்ற அகதிகளுக்கான அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகளின் பிரச்சனை பெரிய அளவில் அதிகரித்துவரும் இன்றையச் சூழலில், அதற்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில் அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

போர், சரிநிகரற்ற நிலைகள், ஏழ்மை, தட்பவெப்ப நிலை மாற்றம், சித்ரவதைகள் என பல காரணங்களால் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறும் மக்கள், பிறரால் சுரண்டப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனவும், தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளன, இந்த கத்தோலிக்க நிறுவனங்கள்.

ஆதாரம் :  IndCatholicNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.