2016-09-24 17:24:00

மதங்களைக் கட்டுப்படுத்த சீனாவில் புதிய சட்டங்கள்


செப்.24,2016. மத நிறுவனங்களை மேலும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், சீன அரசு கடுமையான சட்டங்களை வரையறுத்து வருவதாக செய்தி நிறுவனங்கள் உரைக்கின்றன.

சீனாவில் செயலாற்றும் எந்த ஒரு மத நிறுவனமும், வெளிநாட்டின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடாது என்பதை முக்கியக் கருத்தாகக் கொண்டு, இந்த புதிய சட்டங்கள் வரையறுக்கப்படுவதாகக் கூறும் செய்தி நிறுவனங்கள்,  மத அமைப்புக்கள், வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதிலும், இணையதளத்தைப் பயன்படுத்துவதிலும் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகமதிகமாகச் செயல்படுத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளன.

அரசு அனுமதியின்றி, மத அதிகாரிகள்,  மத நடவடிக்கைகளில் ஈடுபடுடவதற்கு, மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ள நிலையில், அனுமதியின்றி மத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மத அமைப்பும், சீன தேசப்பற்றை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும், இந்தப் புதிய சட்டப் பரிந்துரை வலியுறுத்த உள்ளது.

ஆதாரம்: Catholic Culture /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.