சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

மரணதண்டனையை உலகிலிருந்தே அகற்றவேண்டிய நேரம் வந்துள்ளது

மரணதண்டனையை எதிர்த்து அமெரிக்க உச்சநீதி மன்றத்துக்குமுன் போராட்டம் - AP

26/09/2016 17:24

செப்.26,2016.  மரணதண்டனையை கலிஃபோர்னியா மாநிலத்திலிருந்து மட்டுமல்ல, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும், உலகிலிருந்தும் அகற்றவேண்டிய  நேரம் வந்துள்ளது என அழைப்பு விடுத்துள்ளார், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Los Angeles பேராயர் Jose Gomez.

மரணக் கலாச்சாரத்தை ஆதரிக்கும் இன்றைய சமூகத்தில், மனிதனின் மாண்பு மற்றும் வாழ்வின் புனிதத்துவத்தின் ஒரே சாட்சியாக, இரக்கமே இருக்க முடியும் என உரைத்த பேராயர் அவர்கள், குற்றவாளிகளைக் கொலைச் செய்வதைவிட, அவர்களின் மனமாற்றத்திற்காக செபித்து, அவர்கள் சமூகத்தில் மீண்டும் இணைக்கப்பட உதவுவது சிறந்தது என்றார்.

மரணதண்டனையை எதிர்க்கும் அதேவேளை, குற்றமிழைக்கப்பட்டவர்களின் இழப்புக்களையும் உணர்ந்தே உள்ள திருஅவை, அவர்களின் ஆறுதலுக்காகவும் மன அமைதிக்காகவும் இறைவனை வேண்டுகிறது எனவும் Los Angeles பெருமறைமாவட்டத்தின் இதழில் எழுதியுள்ளார் பேராய்ர் Gomez..

ஆதாரம் : CNA/EWTN/வத்திக்கான் வானொலி

26/09/2016 17:24