2016-10-11 16:22:00

நான்கு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு


அக்.11,2016. “மகிழ்வோடு வாழ்வதற்கு, கோபம், பகைமை, வன்முறை, மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை நம்மைவிட்டு அகற்ற வேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று இடம்பெற்றன.

மேலும், அருளாளர் மற்றும் புனிதர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, நான்கு இறையடியார்களின் வீரத்துவ புண்ணிய வாழ்வு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர்நிலை திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இத்திங்கள் மாலை, திருத்தந்தையைச் சந்தித்து, Luigi Zambrano Blanco, Maria Costanza Panas, Maria Teresa Spinelli, Tiburzio Arnáiz Muñoz ஆகிய நான்கு இறையடியார்களின் வாழ்வு பற்றிய விபரங்களைச் சமர்ப்பித்தார்.

Hogar de Nazareth சபையை ஆரம்பித்த, மறைமாவட்ட அருள்பணியாளர்  Luigi Zambrano Blanco(23 டிச.1909-14 பிப்.1983);  இயேசு சபை அருள்பணியாளர் Tiburzio Arnáiz Muñoz(11 ஆக.1865-18 ஜூலை 1926);இயேசு மரி அகுஸ்தீன் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய Maria Teresa Spinelli(1அக்.1789-22 சன.1850);கப்புச்சின் கிளாரா அடைபட்ட துறவு இல்லத்தின் அருள்சகோதரி Maria Costanza Panas(5சன.1896–28,மே,1963) ஆகிய நான்கு இறையடியார்களின் வாழ்வு பற்றிய விபரங்களை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.