2016-10-15 17:42:00

வெப்பம் அதிகரிப்புக்கு காரணமாகும் வாயுக்களை அகற்றுவதற்கு


அக்.15,2016. பூமி வெப்பமடைதலுக்கு அதிகக் காரணமாகும் ஹைட்ரோ ஃபுளூரோகார்பன்களை (HFCs) அகற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தற்கு, Montreal ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 197 நாடுகளின் பிரதிநிதிகள் இசைவு தெரிவித்துள்ளனர்.

ருவண்டா தலைநகர் கிகாலியில் கூடியிருந்த இப்பிரதிநிதிகள், இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் ஏற்றுக்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டை, 2019ம் ஆண்டுக்குள் பத்து விழுக்காடு குறைப்பதற்கு, பணக்கார நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன. ஆனால், சீனா, 2029ம் ஆண்டுக்குள் இவ்வாறு குறைக்கும். இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகள் 2028ம் ஆண்டில் இந்நடவடிக்கையை ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  

ஹைட்ரோ ஃபுளூரோகார்பன், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் போன்ற  சாதனங்கள் செயல்படத் தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும்.

கார்பன்-டை-ஆக்சைடு போன்று, ஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.