2016-10-18 15:32:00

இயற்கை விழிப்புணர்வு குறித்து மும்பையில் மும்மத கருத்தரங்கு


அக்.18,2016. 'சுற்றுச்சூழல் அக்கறை குறித்த திருத்தந்தையின் படிப்பினைகளும், அதற்கு இணையான இந்துமத படிப்பினைகளும்' என்ற தலைப்பில் மும்பை நகரில் இத்திங்களன்று கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

மும்பையிலுள்ள அர்ஜென்டினா நாட்டு துணைத்தூதரகம், K J Somaiya Bharatiya Sanskriti Peetham மற்றும் Somaiya Vidyavihar என்பவைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் பங்குபெற்று, அவரவர் மதப்படிப்பினைகள் வலியுறுத்தும் இயற்கை பாதுகாப்பு குறித்து உரையாற்றினர்.

மனித குலத்தின் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் நிறைந்தவை என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்ததாக உரைத்தார், அர்ஜென்டினா தூதரக உயர் அதிகாரி Alejandro Zothner Meyer.

Somaiya Vidyavihar  வளாகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தினை, மும்பை துணை ஆயர் John Rodrigues அவர்கள் துவக்கி வைத்து, உரையுமாற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ' Laudato Si '  என்ற சமூகப்படிப்பினை ஏடு கற்பிக்கும் பாடங்கள் குறித்தும், இயற்கைப் பாதுகாப்பில் இந்து மத படிப்பினைகள் மற்றும் இஸ்லாம் மதப் படிப்பினைகள் குறித்தும் இக்கருத்தரங்கில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.