2016-10-20 16:05:00

குழந்தையின் ஐந்து நோய்களைத் தீர்க்கும் மலிவு விலை மருந்து


அக்.20,2016. குழந்தைகளைப் பாதிக்கும் ஐந்து வகை நோய்களைத் தீர்க்கும் மருந்து, மிகக் குறைந்த விலையில் கிடைப்பதற்குரிய வழிமுறையை, ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி அமைப்பான UNICEF பெற்றுள்ளது என்று ஐ.நா. செய்தி கூறுகிறது.

ஒரு டாலருக்கும் குறைவான விலையில் இந்த மருந்து கிடைப்பதால், 45 கோடி குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் மருந்துகளை வாங்கி, 80 நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் இந்த மருந்துகளை அனுப்ப, UNICEF திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளின் மூக்கு, தொண்டை ஆகியவற்றை பாதிக்கும் diphtheria நோய், மற்றும் மஞ்சள் காமாலை, காய்ச்சல் உட்பட, ஐந்து வகை ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றது, இந்த மருந்து என்று UNICEF அறிக்கை கூறுகிறது.

உலக நலவாழ்வு நிறுவனமான WHO, பில்-மெலிண்டா கேட்ஸ் நிறுவனம், UNICEF மற்றும் Gavi Alliance நிறுவனம் ஆகியவற்றின் இணைந்த ஒத்துழைப்பினால் இந்த முயற்சி சாத்தியமானது என்று UNICEF உயர் அதிகாரி, Shanelle Hall அவர்கள் தெரிவித்துள்ளார்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் பல குழந்தைகளுக்கு, இந்த மலிவான மருந்து, ஒரு பெரும் உதவியாக அமையும் என்று, Shanelle Hall அவர்கள் இப்புதனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.

ஆதாரம் : UNICEF / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.