2016-10-22 15:37:00

திருப்பீடம், எகிப்தின் Al-Azhar மீண்டும் உரையாடல்


அக்.22,2016. திருப்பீடத்துக்கும், எகிப்தின் Al-Azhar பல்கலைக்கழகத்திற்கும் இடையே உரையாடலை மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு, திட்டங்கள் வகுப்பதற்கென, திருப்பீடம் தனது பிரதிநிதிகளை எகிப்துக்கு அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் தலைமையிலான குழு, இஞ்ஞாயிறன்று கெய்ரோ சென்று, Al-Azhar பிரதிநிதிகளைச் சந்திக்கும் என, இவ்வெள்ளியன்று திருப்பீடம் அறிவித்தது.

உரோமையில், அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும், இவ்விரு தரப்பினரின் சந்திப்புக்காக, இக்குழு, திட்டங்களை வகுக்கும் என்றும், இச்சந்திப்பு, 2017ம் ஆண்டு ஏப்ரலில் இடம்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Al-Azhar மசூதித் தலைவராகிய Ahmed al Tayyeb அவர்கள், உலகின் 150 கோடி சுன்னிப்பிரிவு முஸ்லிம்களின் உயரிய தலைவர் என, சில முஸ்லிம்கள் கூறுவதாக, ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.