2016-10-24 16:34:00

அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் தினம்


அக்.24,2016. பேரிடர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுப்பினர்கள், ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

அக்டோபர் 24, இத்திங்களன்று, ஐக்கிய நாடுகள் தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், மத்தியக் கிழக்கு, தென் சூடான், சாஹெல் மற்றும் பிற பகுதிகளில் இடம்பெறும் தீர்வு காணப்படாத மோதல்கள் உட்பட, உலகில் காணப்படும் அளவிடமுடியாத துன்பங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி, ஐ.நா. நிறுவனத்தின் ஆவணம் அமலுக்கு வந்ததையடுத்து, இந்நாள் ஐ.நா. தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. “சுதந்திரம் முதலில்” என்ற தலைப்பில் இவ்வாண்டின் இத்தினம், இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது.

வருகிற டிசம்பர் 31ம் தேதியோடு தனது பணியிலிருந்து ஓய்வுபெறும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், ஆற்றிய உரையில், ஐ.நா.வின் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.