2016-10-24 16:45:00

பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்டோரிடையே காரித்தாஸ்


அக்.24,2016. பிலிப்பீன்ஸ் நாட்டின் வடபகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது, அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

வடபகுதியின் 4 மாநிலங்களுக்கு துவக்க உதவியாக 14,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள காரித்தாஸ் அமைப்பு, தற்போது, பெரிய தேவைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறினார் பிலிப்பீன்சின் காரித்தாஸ் தலைவர் அருள்பணி Edwin Gariguez.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், படுக்கைகள், வீடு பழுதுபார்க்கும் கருவிகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளதாகவும் உரைத்தார், அருள்பணி Gariguez.

இம்மாதம் 19ம் தேதி ஏற்பட்ட புயல் மற்றும் நிலச்சரிவினால், குறைந்த பட்சம் 13 பேர் உயிரிழந்தனர், மற்றும், பல ஆயிரக்கணக்கானோர் குடிபெயர்வுக்கு உள்ளாயினர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.