2016-10-25 15:46:00

நீதித்துறையில் சீரமைப்புகளுக்கு தென்ஆப்ரிக்க ஆயர்கள் அழைப்பு


அக்.,25,2016. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் முடிவை, தென் ஆப்ரிக்க அரசு மாற்றியமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.

தென் ஆப்ரிக்க அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் குற்றங்களை விசாரிக்கும் உரிமையுடைய ஒரு செயல், திறனுடைய மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கும் வரையிலாவது, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினராக தென் ஆப்ரிக்க அரசு தொடர்வது அவசியம் எனக் கூறியுள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகிச் செல்லும் தென் ஆப்ரிக்க அரசின் முடிவைத் தொடர்ந்து, ஏனைய நாடுகளும் இதே வழியைப் பின்பற்றும் ஆபத்து உள்ளது எனவும் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

இப்பரிந்துரை, பாராளுமன்றத்தின்முன் வைக்கப்படும்போது, தென் ஆப்ரிக்க அரசியல்வாதிகள் தங்கள் மனச்சன்றின்படி வாக்களிப்பதுடன், நாட்டின், நீதி விவகாரம் தொடர்புடைய சீரமைப்புகளுக்கும் முன்வரவேண்டும் என மேலும் கேட்டுள்ளனர் தென் ஆப்ரிக்க ஆயர்கள்.

ஆதாரம் :  ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.