2016-10-31 15:19:00

மத விடுதலை விழிப்புணர்வுக்கு இஸ்லாமிய குருக்களின் உதவி தேவை


அக்.31,2016. பாகிஸ்தான் நாட்டில் மதவிடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இஸ்லாமிய மத குருக்கள் உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார், அந்நாட்டிற்கான நார்வே தூதுவர்.

மத விடுதலை குறித்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நார்வே தூதுவர் Tore Nedrebo அவர்கள், அடிப்படை மனித உரிமைகள் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும், அதற்கு சனநாயகமும், சட்ட ரீதியான ஆட்சியும் உதவ முடியும் என்றார்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் Quetta பகுதியில், இரு கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்பட்ட தேவ நிந்தனை குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது, அந்நாட்டின்  Jamait Ulema-e-Islam என்ற அமைப்பு.

புனித நூலான குரானின் பக்கங்களை எரித்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு Shakeela Kauser என்ற கிறிஸ்தவப் பெண்ணும், அவர் மகனும் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கிறிஸ்தவத் தலைவர்களும், இஸ்லாமிய அமைப்பும் இணைந்து இதில் சுமுகமான தீர்வு கண்டு, அவர்களை விடுவித்துள்ளனர்.

ஆதாரம்: UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.