2016-11-04 14:28:00

இது இரக்கத்தின் காலம்...: புத்துணர்ச்சிக்கு உதவவே ஓய்வு


மரவெட்டிகள் இருவர், ஒரு காட்டிற்குச் சென்றனர். மாலையில் மீண்டும் அவ்விருவரும் சந்தித்த போது, ஒருவரிடம் அதிக விறகு இருந்தது. மேலும், அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார். மற்றவருக்கோ மிக ஆச்சரியம். ‘நம்மை போலத்தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது’ என்று, ஆர்வம் தாங்காமல் அவரிடமே கேட்டுவிட்டார்! ‘நான் இடைவிடாமல் வெட்டியும் கொஞ்சம்தான் கிடைத்துள்ளது. நீ இவ்வளவு அதிகம் வெட்டியும், கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி?’ என்று கேட்டார். ‘நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொண்டேன்’ என்று சொன்னார், நண்பர்! மறுநாள், அவரும், தன் நண்பரைப்போல், இடையிடையே ஓய்வெடுத்து, மரம் வெட்டினார், இருப்பினும், அவரால், நண்பர் வெட்டிய அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை. மறுநாள் மரம் வெட்டும்போது, ஒளிந்திருந்து பார்க்கவேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினார், குறைவாக மரம் வெட்டியவர். மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவர் நண்பரைப் பின் தொடர்ந்துச் சென்றார். நண்பரும் அரைமணி நேரம் மரம் வெட்டிவிட்டு ஓய்வாக அமர்ந்தார். ஆனால், ஓய்வுநேரத்தில், அந்நண்பர், தன் கோடாரியைத் தீட்டிக்கொண்டிருந்தார்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.