2016-11-04 14:43:00

ஜப்பானில், அனைத்து அணுசக்தி நிலையங்களும் மூடப்பட கோரிக்கை


நவ.04,2016. அணுசக்தியை, அமைதியான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கென உள்ள அணுசக்தி நிலையங்கள் உட்பட, அனைத்து அணுசக்தி நிலையங்களும் ஜப்பானில், மூடப்பட வேண்டும் என்று, அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“அணுசக்தி நிலையங்களை அகற்றுதல் : ஜப்பான் கத்தோலிக்கத் திருஅவையிடமிருந்து விண்ணப்பம்” என்ற தலைப்பில், 290 பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றை வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள், ஜப்பானில், அணு குண்டுகள் ஏற்படுத்தியுள்ள கடும் விளைவுகள், ஃபுக்குஷிமா அணுசக்தி பேரிடர் உட்பட, பல விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இடம்பெற்ற, Fukushima Dai'ichi அணுசக்தி நிலையப் பேரிடரின் கடும் பாதிப்புகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si' திருமடல் போன்றவை குறித்து ஆய்வு செய்து இந்நூலை வெளியிட்டுள்ள ஆயர்கள், ஜப்பானில், அனைத்து அணுசக்தி நிலையங்களும் அகற்றப்பட வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளனர்.

தங்களின் இவ்விண்ணப்பத்திற்கு, அப்பகுதியின் மற்ற மதத்தினரும், ஆதரவு தருமாறும்,    ஜப்பான் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.