2016-11-08 15:09:00

சீனாவில் நடந்த ஆயர் திருநிலைப்பாடு குறித்து திருப்பீடம்


நவ.09,2016. “ஏதோ ஓர் உண்மையான, மிகவும் அழகான, மிகவும் சிறப்பான நன்மையான செயல்களுக்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது, இறைவாக்காகச் சொல்லப்படுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், சீனாவில் நடைபெறும் ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வுக்கு, திருத்தந்தையின் அனுமதி அவசியம் எனவும், ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாகக்கூட ஆயராகத் திருநிலைப்படுத்திக்கொள்ளும் முறை சரியானது அல்ல எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரேக் புர்கே அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனாவில், திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருஅவையின் அருள்பணி டாங் குவான்ஹூவா அவர்கள், தனியாக, தன்னை ஆயராகத் திருநிலைப்படுத்திக் கொண்டதாக, இந்நாள்களில் வெளிவரும் செய்திகளை முன்னிட்டு இவ்வாறு தெரிவித்தார் புர்கே.

இந்த திருநிலைப்பாட்டை, திருப்பீடம் அங்கீகரிக்கவில்லை என்றும், இத்தகைய நிகழ்வுகள், திருஅவைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், இவ்வாறு செய்பவர்கள், திருஅவை சட்டத்தைக் கடுமையாய் மீறுகின்றனர் என்றும், கூறினார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்.

இந்தத் திருநிலைப்பாட்டைக் குறித்து, சீனாவில் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருஅவை, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.