2016-11-11 15:36:00

தட்டம்மையால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சிறார் மரணம்


நவ.11,2016.  உலகளவில் தட்டம்மை நோயினால் ஏற்படும் இறப்புகள் 79 விழுக்காடு குறைந்திருந்தாலும், 2000த்துக்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய 400 சிறார், ஒவ்வொரு நாளும் இந்நோயால் இறந்துள்ளனர் என்று, ஐ.நா. நிறுவனம் ஒன்று கூறியது.

தட்டம்மையை உலகிலிருந்து ஒழிப்பது இயலாத காரியம் அல்ல என்றுரைத்த, யூனிசெப் நிறுவனத்தின் ராபின் நான்டி அவர்கள், இந்நோயை ஒழிப்பதற்கு, அரசியல் அளவில் ஆர்வம் தேவை என்று பரிந்துரைத்தார்.

2000த்துக்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தட்டம்மைக்குத் தடுப்பூசி போட்டதால், ஏறக்குறைய 2 கோடியே 3 இலட்சம் பேரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது என்றும், நான்டி அவர்கள் கூறினார்.

2015ம் ஆண்டில், தட்டம்மைக்குத் தடுப்பூசி போடததால், 1,34,000 சிறார், இந்நோயால் இறந்தனர் என்றும், இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, இந்தோனேசியா, எத்தியோப்பியா, காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் இவ்விறப்புகள் அதிகம் என்றும், யூனிசெப் கூறியது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.