2016-11-12 14:41:00

ஆண்டவரே, என் இதயக் கதவை உந்தித் தள்ளுவதற்கு உதவியருளும்


நவ.12,2016. “ஆண்டவரே, என் இதயத்தின் கதவை உந்தித் தள்ளுவதற்கு எனக்கு     உதவியருளும் என்று, புனிதக் கதவின் முன்பாக நின்று நான் கேட்கிறேன்” என்ற சொற்கள், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் வெளியிடப்பட்டன.

மேலும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், தன்னார்வப் பணியாற்றிய ஏறக்குறைய நான்காயிரம் பேரில், பெரும்பகுதியினர் இத்தாலியர் என்றும், இந்த நான்காயிரம் பேரில், 1,800 பேர் Knights of Malta கத்தோலிக்க பிறரன்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா, தாய்வான், காங்கோ, ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டீனா, கொலம்பியா போன்ற நாடுகளிலிருந்தும் பெருமளவான தன்னார்வலர்கள் பணியாற்றினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சனிக்கிழமை, கடைசி சனிக்கிழமை யூபிலி மறைக்கல்வியுரை நிகழ்வின்போது, 600 தன்னார்வலர்கள் பணியாற்றினர் என்றும், பொதுவாக, இந்த சிறப்பு யூபிலி ஆண்டில், இந்தப் பணியாளர்கள், உரோமைக்கு வருகைதரும் திருப்பயணிகளுக்கு, ஏறக்குறைய ஒரு வாரம் என, தங்கள் நேரத்தை அர்ப்பணித்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.