சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

இந்தோனேசிய கோவில் மீது தாக்குதல், குழந்தை உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு காலிமந்தான் பகுதி கோவில் வளாகத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு விபத்து - REUTERS

14/11/2016 17:17

நவ.,14,2016. இஞ்ஞாயிறன்று இந்தோனேசியாவின் கிழக்கு காலிமந்தான் பகுதி கோவில் வளாகத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.

கோவிலின் முன்புறம் விளையாடிக் கொண்டே தங்கள் பெற்றோருக்காக காத்திருந்த குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒலிவியா இன்டான் மர்புன்(Olivia Intan  Marbun) என்ற இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததுடன், மூன்று சிறார்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ள இந்தோனேசிய காவல்துறை, இஸ்லாமிய தீவிரவாதக் குழுவுடன் இந்த ஐவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வாண்டு ஜனவரியில், இஸ்லாமிய தீவிரவாதக்குழு ஒன்று தலைநகர் ஜகார்த்தாவில் நடத்திய தாக்குதலில் நான்குபேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி

14/11/2016 17:17