2016-11-19 16:15:00

இலங்கை அகதிகள் மலேசியாவில் தங்குவதற்கு UNHCR அனுமதி


நவ.19,2016. இலங்கையிலிருந்த புலம்பெயர்ந்த 26,615 பேர், மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஐ.நா.வின் குடியேற்றதாரர் அமைப்பு (UNHCR) அங்கீகாரம் அளித்திருப்பதாக, மலேசிய அரசு அறிவித்துள்ளது.

மலேசியப் பிரதமரின் செயலக அமைச்சர், டருக் சேரி சஹிடான் காசிம் அவர்கள், இத்தகவலை வெளியிட்டுள்ளார் என, தமிழ்வின் இணையதள பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், உலகம் முழுவதிலும் இருந்து 888,294 புலம்பெயர்ந்தோர், மலேசியாவில் தங்கியிருப்பதற்காக விண்ணப்பித்திருந்தார்கள், இவர்களில் 824,419 பேர் மியான்மாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்.

மியான்மாரை அடுத்து, இலங்கை புலம்பெயர்ந்தோருக்கே தற்போது அதிகளவில் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில், இலங்கையைச் சேர்ந்த 26,615 புலம்பெயர்ந்தோருக்கு மலேசியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து சோமாலியா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாடுகளின் புலம்பெயர்ந்தோருக்கும் மலேசியாவில் தங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் :  Tamil win/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.