சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ பிறரன்புப் பணி

“இராயப்பர் காசு” புதிய இணையதளம்

இராயப்பர் காசு புதிய இணையதளம் - RV

22/11/2016 15:26

நவ.22,2016. திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக எடுக்கப்படும், “இராயப்பர் காசு” என்ற நடவடிக்கைக்கு, புதிய இணையதளம் ஒன்றைத் திறந்துள்ளது திருப்பீடச் செயலகம்.

www.peterspence.va. என்ற முகவரியில், ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் இப்புதிய இணையதளம், நவம்பர் 21, இத்திங்களன்று திறக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற மொழிகளில் விரைவில் இது திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனைகளைக் கொண்டுள்ள இந்த இணையதளம், இராயப்பர் காசு நடவடிக்கைக்கு, விசுவாசிகள் தங்களின் பங்களிப்பை அளிப்பதற்கு மேலும் உதவும் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது .

இந்நடவடிக்கையின் முக்கியத்துவம் பற்றி சிந்திக்கவும், இரக்கம், பிறரன்பு, அமைதி போன்ற திருப்பீடத்தின் பணிகளுக்கு ஆதரவு அளிக்கவும், இந்த இணையதளம் உதவும் எனவும், திருப்பீடம் தெரிவித்துள்ளது.

திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக எடுக்கப்படும், “இராயப்பர் காசு” என்ற நடவடிக்கைக்கு, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையினர், தங்களின் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

22/11/2016 15:26