2016-12-01 15:55:00

எய்ட்ஸ் விழிப்புணர்வு பணிகளுக்கென பான் கி மூனுக்கு விருது


டிச.01,2016. வெறுப்பும், விலக்கிவைப்பதும் எய்ட்ஸ் நோயை இன்னும் பரவச்செய்கின்றன என்றும், இதைக் குறித்து மௌனம் காப்பது மரணத்திற்கு சமம் என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

எய்ட்ஸ் உலக நாளையொட்டி, நவம்பர் 30 இப்புதனன்று, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், 2030ம் ஆண்டுக்குள் இந்நோயின் தாக்கத்தை நீக்கும் இலக்குகள் குறித்துப் பேசினார்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவது, உலக சமுதாயத்தின் முதல் கடமை என்பதை வலியுறுத்திவந்தவர் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் என்று கூறிய, UNAIDS தலைவர், Michel Sidibé அவர்கள், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கென பான் கி மூன் அவர்கள் ஆற்றிய பணிகளுக்கென அவருக்கு விருது ஒன்றை வழங்கினார்.

UNAIDS தன் முயற்சிகளைத் துவங்கியபோது 30 இலட்சம் மக்களே, HIV நோய்க்கென மருத்துவ உதவிகள் பெற்றனர் என்றும், தொடர்ந்த விழிப்புணர்வு செயல்பாடுகளால்  தற்போது, இந்த எண்ணிக்கை, 1 கோடியே 30 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும், Sidibé அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.