2016-12-01 13:54:00

திருவருகைக்காலச் சிந்தனை : நம்பிக்கை நாற்றுக்களை நடுவதற்கு..


புயல் காற்றில் தடுமாறிய விமானத்தில், மக்கள் அனைவரும், பயந்து, தத்தம் கடவுளிடம் வேண்டும் சமயத்தில், அங்கே, ஒரு சிறுமி மட்டும், எவ்வித பயமுமின்றி, தன் பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு சிலர், அவளுக்கு பயமில்லயா எனக் கேட்க, அவளோ, என் தந்தைதான் இந்த விமானத்தை ஓட்டிச் செல்கிறார். என்னை அவர் எப்படியும் காப்பாற்றி விடுவார் என்று சொல்லிவிட்டு, மீண்டும் விளையாட ஆரம்பித்தாள்.

ஒருவர் தன் இரு கைகளையும் இழந்தாலும், தன்னம்பிக்கையை மட்டும் கொண்டிருந்தால், வாழ்ந்துவிட முடியும் என்பதற்கு, இந்த உலகில், நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்று, இயேசு, தன்னை நம்பி வந்தவர்களின் நம்பிக்கையைக் கண்கொண்டு, அவர்களுக்கு நலம் அருளுகிறார். நம் வாழ்வில், நாம், எத்தகைய நம்பிக்கையை இறைவன் மேல், நம்மை அன்பு செய்பவர்கள் மேல், நம்மை நம்புகிறவர்கள் மேல், வைக்கின்றோம்? நம் வாழ்வால், சொல்லால், செயலால், எத்தனை பேருக்கு நம்பிக்கை அளித்திருக்கின்றோம்?

மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற, திரு. மாரியப்பனின் வாழ்வும், வார்த்தைகளும் நமக்கு உணர்த்துவது, நம்பிக்கையே வாழ்க்கை. நம்பிக்கை நாற்றுக்களை நம்மில் வளர்க்க, பிறருக்கும் அவற்றைப் பகிர்ந்தளிக்க, இத்திருவருகைக் காலம் நமக்கு உதவட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.