சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கு இறையடியார்கள் ஏற்பு

அல்பேனியாவில் 38 மறைசாட்சிகளை அருளாளர்களாக அறிவிக்கும் திருப்பலிக்குச் செல்லும் கர்தினால் அமாத்தோ - AP

02/12/2016 16:08

டிச.02,2016. அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கென, எட்டு இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வுமுறை, ஓர் இறையடியாரின் பரிந்துரையால் இடம்பெற்ற ஒரு புதுமை மற்றும், 23 மறைசாட்சிகள் பற்றிய விபரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வியாழன் மாலையில், புனிதர்கள் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, இவ்விபரங்களைச் சமர்ப்பித்தார்.

புனித வளன் துறவு சபையின் அருள்பணியாளர் Giovanni Schiavo(ஜூலை,8,1903 – சன.27,1967)அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற ஒரு புதுமை; 

1936ம் ஆண்டுக்கும், 1937ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இஸ்பெயினில், திருஅவைக்கு எதிராக நடந்த கலவரத்தில், விசுவாசத்திற்காக, மறைசாட்சிகளாக கொல்லப்பட்ட, மறைப்பணிகள் துறவு சபையின் அருள்பணி Vincenzo Queralt Lloret, அவரோடு சேர்ந்த இருபது இறையடியார்கள்; இந்த இருபது இறையடியார்களுள், ஆறு பேர் மறைப்பணிகள் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், ஐவர், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், இருவர், பிறரன்பு சபையின் அருள்சகோதரிகள், ஏழு பேர் அற்புத அன்னை மரியா பக்த சபையைச் சேர்ந்த பொதுநிலை விசுவாசிகள்.

லித்துவேனிய நாட்டின் Kaišiadorys ஆயரான, பேராயர் இறையடியார் Teofilo Matulionis(பிறப்பு-ஜூன்,22,1873) அவர்கள், பள்ளிகளில், கத்தோலிக்கக் கல்வி போதிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி வந்ததால், இவர் அடிக்கடி கைது செய்யப்பட்டார் மற்றும், சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இறுதியில், 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி விசுவாசத்திற்காக, மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

இறையடியார் அருள்பணி Stanley Francesco Rother (பிறப்பு- மார்ச் 27,1935) அவர்கள், 1981ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி விசுவாசத்திற்காக, மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

கப்புச்சின் துறவு சபையின் இறையடியார் கர்தினால் Guglielmo Massaja(ஜூன்,8,1809-ஆக.6,1889); திருச்சிலுவை பிள்ளைகள் சபையைத் தோற்றுவித்த இறையடியார் அருள்பணி Nunzio Russo(அக்.30,1841- நவ. 22, 1906); இஸ்பெயினின் Masarrochos பங்குக்குரு இறையடியார் அருள்பணி Giuseppe Bau Burguet(ஏப்.20,1867 – நவ.22,1932).

இறையடியார் அருள்பணி Mario Ciceri (செப்.08,1900 – ஏப். 04,1945); கருணை அன்னை மரியா சபையை ஆரம்பித்த இறையடியார் Maria Giuseppa Aubert (ஜூன்,19,1835 –அக்.01,1926); இயேசுவின் திருஇதய பெண்கள் திருத்தூதர் சபையைத் தோற்றுவித்த இறையடியார் Luce Rodríguez-Casanova y García San Miguel(ஆக.28,1873 –சன.08,1949);

நம் ஆண்டவர் இயேசுவின் திருஇரத்த ஆராதனை சபையை ஆரம்பித்த இறையடியார் Caterina Aurelia(ஜூலை 11,1833 - ஜூலை6,1905).

அமலமரி சிறிய சகோதரிகள் சபையின் இறையடியார் அருள்சகோதரி Leonia Maria Nastał (நவ.08,1903-சன.10,1940) ஆகியோர் குறித்த விபரங்களை திருத்தந்தை ஏற்றுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

02/12/2016 16:08